செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 4 டிசம்பர் 2024 (18:07 IST)

சுவாமிமலை கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் திருக்கார்த்திகை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க இருப்பதாக கோவில் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை என்பது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. முருகனின் நான்காம் படை வீடான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளை காலை கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவில் இருந்து உற்சவம் மண்டபம் நோக்கி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எட்டு நாட்கள் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெறும் என்றும் டிசம்பர் 13ஆம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று ஒன்பது மணிக்கு தேர் வடம் பிடித்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு திருக்கார்த்திகை திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Edited by Mahendran