திங்கள், 9 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (15:09 IST)

மீண்டும் இணையும் மெஹந்தி சர்க்கஸ் கூட்டணி!

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில்,  ராஜு முருகனிடம் இணை இயக்குனர் சரவணன் ராஜேந்திரன் (ராஜு முருகனின் அண்ணன்) இயக்கிய திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். `குக்கு', `ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் இந்த படத்திற்கு கதை,  வசனம் எழுதுகிறார்.

இந்த படத்தில் தற்போது சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி பெரியளவில் கவனம் பெறவில்லை என்றாலும் பாடல்கள் தற்போது வரை கேட்கப்பட்டு சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாகின.

இந்நிலையில் இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரங்கராஜ் மற்றும் இயக்குனர் சரவணன் ஆகியோர் இணைந்து மீண்டும் ஒரு படத்தைத் தொடங்கவுள்ளனர்.  விரைவில் இந்த ப
டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.