1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 நவம்பர் 2024 (15:03 IST)

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்.. துரைமுருகன் அறிவிப்பு..!

Anna Arivalayam
தமிழக முதல்வர் மற்றும் திமுக பொது தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கூட்டம் நவம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அது போது கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கூட்டத்தில் அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran