புதன், 20 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (19:13 IST)

சிறுவாபுரி முருகன் கோவிலின் சிறப்புகள்..!

சென்னை அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் பக்தர்களின் மனங்கவர்ந்த கோவிலில் ஒன்றாக அமைந்துள்ளது.

சென்னைக்கு வடமேற்கே சென்னைக் கொல்கத்தா நெடுஞ்சாலையில் 33வது கிலோ மீட்டரில் இடது பக்கம் தெரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய கோவில் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால்   சிறுவாபுரி கிராமமும், அந்த கிராமத்தில் ஒரு முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

இரண்டு பக்கமும் பசுமையான நிலங்கள், நெற்கதிர்கள் மற்றும் இயற்கை எழில் காட்சிகளுடன் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஏராளமான முருக பக்தர்கள் வாடிக்கையாக வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ஊரில் ராமர் கோயில், விநாயகர் கோயில், ஆகியவை இருந்தாலும், சிறுவாபுரி முருகன் கோவில் மிகவும் புகழ்பெற்றது என்பதும் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முருக பக்தர்களின் மனங்கவர்ந்த சிறுவாபுரி முருகன் கோவிலில் சென்று வணங்கினால், ஆண்டு முழுவதும் மனம் நிம்மதியாக இருக்கும் என்று பக்தர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


Edited by Mahendran