வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (13:03 IST)

அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் முதல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..!

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமி முதல் அறிக்கையை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அந்த தீர்ப்பில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொருள் பொதுச் செயலாளர் பதவியேற்ற பின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமை சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்டத்திட்ட விதிமுறைப்படி கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்கள் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி புதன்கிழமை தலைமை கழகத்தின் விநியோகப்பட்ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்ப படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து ஒரு உறுப்பினருக்கு ரூபாய் 10 வீதம் தலைமை கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran