1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (19:25 IST)

இன்று கமலா சப்தமி: விரதம் இருந்தால் ஏராளமான பலன்கள்...

Viratham
பங்குனி மாதம் வரும் சப்தமி தினத்தை கமலா சப்தமி என்று கூறப்படுகிறது. இன்று கமலா சப்தமி தினத்தை முன்னிட்டு மகாலட்சுமியை வழிபட்டு விரதம் இருந்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். 
 
மேலும் இன்று சூரிய பகவான் மற்றும் மகாலட்சுமியை வழங்கினால் குழந்தை செல்வம் இல்லாதவர்கள் குழந்தை பேறு பெறுவார்கள் என்றும் தீராத நோய்கள் தீரும் என்றும் நம்பிக்கை உள்ளது 
 
இன்றைய தினம் முழுவதும் மகாலட்சுமி தேவிக்கு உரிய மந்திரங்களையும் ஸ்லோகங்களையும் உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வீட்டில் பூஜை செய்து அதன் பின் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும் என்றும் முடிந்த அளவு இன்றைய தினத்தில் தானங்கள் செய்ய வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran