1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜூன் 2022 (08:02 IST)

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!

சதுர்த்தியன்று விரத மிருந்து இரவில் கோயிலில் நடக்கும் சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும்.

 
மறுநாள் நீராடியதும் விநாயகரை வழிபட்டு விரதம் முடிக்க வேண்டும். இதை எந்த தமிழ் மாதத்தில் துவங்குகிறோமோ, அதே மாதத்தி ல் முடிக்க வேண்டும். வளர்பிறை சதுர்த்தி விரதத்தை மட்டுமே ஒருவர் ஆயுள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.
 
நவக்கிரகங்களில் கேதுவின் அதிபதி விநாயகர். கேது திசை, கேது புத்தியால் சிரமப்படுபவர்கள் செவ்வாயன்று விநாயகரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமையில் வன்னி இலைகளால் அர்ச்சித்தால் ஏழரைச்சனி, அஷ்டமத்து ச்சனி பாதிப்பு குறையும். ஞாயிறன்று எருக்கம்பூ மாலை அணிவிக்க சூரிய தோஷம் விலகும்.
 
எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும்  கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர் இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள்.
 
வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்பட விருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.
 
விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பின் தான் கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும்.