செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (21:57 IST)

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

thiruvannamalai annamalaiyar
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த  நேரம் பற்றி கோவில் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இருக்கும் இக்கோயிலில் பின்புறம் உள்ள மலையே அண்ணாமலை என்று பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

பவுர்ணமியைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் கிரிவலம் வருவர்.இந்த நிலையில், ‘’இந்த பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி வரும் 5 ஆம் தேதி புதன் கிழமை காலை 10:16 மணிக்கு தொடங்கி, மறு நாள் 6 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10:56 மணிக்கு முடிவடைகிறது ‘’என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.