வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (19:05 IST)

பங்குனி உத்திர நாளில் குலதெய்வ வழிபாடு: இரட்டிப்பு பலன் கிடைக்கும்..!

Kula Deivam new
பங்குனி உத்திர தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்தால் இரட்டை பலன்கள் கிடைக்கும் என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
பங்குனி உத்திர நாளில் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்றும் அன்றைய தினம் வழிபடுவது இரட்டை பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை காலகாலமாக இருந்து வருகிறது என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
காவல் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் குலதெய்வங்களுக்கு கோவில்களில் சென்று வழிபட வேண்டும் என்றும் குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரன்போது மற்றும் பங்குனி உத்திர நட்சத்திரத்தின் போது வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி பங்குனி உத்திரம் திருவிழா நட்சத்திர நாளை ஒட்டி அன்றைய தினம் குலதெய்வ வழிபாடு செய்தால் அனைத்து நல்ல பயன்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran