சருமத்திற்கு அற்புத பயன்தரும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்...!!

Sasikala|
உடலில் ஏற்படும் காயங்களை, நோய்த்தொற்று, ஏற்படாமலும் பாக்டீரியா தாக்குதல் ஏற்படாமலும் தடுக்க மஞ்சள் பயன்படுகிறது. காயங்களில் தொற்று ஏற்பட்டு அதனால் அழுகிய நிலையில் ஏற்படாமலும் மஞ்சளால் தடுக்க முடியும்.

உடலில் உள்ள செல்களில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கவும் தன்மை மஞ்சளில் உள்ள மஞ்சளகத்திற்கு உள்ளதால் இளமைப்பொலிவுடன் எப்போதும் இருக்க முடியும். இளம் வயதிலேயே முகத்தில் வறட்சி,  தோல் சுருக்கம், ஏற்படுவதை இதனால் தடுக்க முடியும்.
 
பருக்கள், வெடிப்புகள்,  மட்டுமல்லாமல் முகத்தில், அங்காங்கே சிவப்பு திட்டுகள் ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் மஞ்சளுக்கு உள்ளது.
 
எண்ணெய் முகம், உள்ளவர்கள் மஞ்சளை பயன்படுத்தினால் அவர்களுக்கு எண்ணெய் சுரபி, குறைந்து முகம் பொலிவு, பெறும். தோல் விரைவில் தளர்ந்துவிடாமல் தடுப்பதன் மூலம் இளமையுடன் காட்சியளிக்க முடியும்.
 
சிறிதளவு மஞ்சளை மற்றும் பால் சேர்த்து கலவையாக கலந்துகொண்டு அதனை முகத்தில் தடவவும் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் தளர்வுகள் மறையும் முகம் மென்மையாககும். முகத்தில் காணப்படும் துளைகளையும் மறைந்து சமமாக காட்சியளிக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :