புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையான ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான எளிய குறிப்புகள் !!

மஞ்சள்: மஞ்சள் இயற்கையான சரும பாதுகாப்பு மற்றும் பளிச்சென்ற சருமத்தை தரும் சக்தியை கொண்டுள்ளது. வீக்கத்தை குறைக்கும் சக்தியும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தியும் மஞ்சளில் இயற்கையாவே அமைந்திருக்கின்றது. பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் நிறமிகள் ஆகியவற்றை மஞ்சள் நீக்கவல்லது.

கற்றாழை: கற்றாழை நமது தோலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும் தாவரமாகும். எரிச்சலைக் குறைக்கும் சக்தியும் குணமாக்கும் சக்தியும் கற்றாழைக்கு உண்டு. இந்த குணாதிசயத்தை கொண்ட கற்றாழை வெளிப்புற தோலில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும் பெரும் பணியையும் செய்யும் திறன்  கொண்டுள்ளது.
 
பாதாம் இலைகள்: பாதாம் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அற்புத குணங்கள் உடையவை. இவை தோலை ஈரப்பதமூட்டுவதிலும், பளபளப்பாக்குவதிலும் சிறந்த பணி செய்யும் இலைகளாகும்.
 
சீமைச்சாமந்தி: மிக சிறந்த இயற்கை மூலிகையாக இருந்து சருமத்தை பாதுகாக்கும் சக்தியை கொண்ட மற்றொரு இலை சீமைச்சாமந்தியின் இலைகளாகும்.  இவற்றில் பலவித நன்மை கொண்ட குணங்கள் உள்ளன. இதில் உள்ள ஆல்ஃபா பிஸபோலோ என்ற திரவம் சுருக்கங்களையும், முதிர்ச்சியால் சருமத்தில் ஏற்படும்  கோடுகளையும் குறைக்க உதவி செய்யும்.
 
துளசி: துளசி இலையில் இருக்கும் பாதுகாப்பு தடுப்பு சக்தி கண்ணின் கருவளையங்கள், பருக்கள் ஆகியவற்றை தடுக்கும் வல்லமையை கொண்டுள்ளது.