1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Tips for maintaining skin using green tea...!!

கிரீன் டீயை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்க குறிப்புகள்...!!

கிரீன் டீ
கிரீன் டீயை சரும அழகை அதிகப்படுத்துவதற்காக பயன்படுத்தலாம். பல அழகுக்கலை நிலையங்களிலும் கிரீன் டீயை பேஸ் மாஸ்காக பயன்படுத்தி வருகின்றனர். 
முதலில் சருமத்தை சுத்தப்படுத்துவது மிகவும் அவசியமானது. சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகளவான எண்ணெய்த் தன்மை, தேவையற்ற  கறைகளை நீக்க வேண்டும்.
 
பயன்படுத்தும் முறை: கிரீன் டியை தயாரித்து சிறிது நேரம் குளிர வைத்து அதில் ரோஸ் வாட்டரைச் சேர்த்து, அந்தக் கலவையை முகத்தில் தடவி சில நிமிடங்களிற்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். பின்பு நீரினால் கழுவினால் சுத்தமான சருமத்தைப் பெற முடியும்.
 
சருமத்தை சுத்தப்படுத்திய பின்பு ஸ்கிரப் செய்வதன் மூலம் அதில் உள்ள இறந்த கலங்களை நீக்கி சருமத்தை மேலும் மெருகூட்ட வேண்டும்.
பயன்படுத்தும் முறை: ஒரு பாத்திரத்தில் 1 மேசைக்கரண்டி சர்க்கரை, 2 மேசைக்கரண்டி வடித்த கிரீன் டீ, 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் போன்றவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி குறைந்தது 6 நிமிடங்களாவது வட்டவடிவில்  மசாஜ் செய்வதன் மூலம் இறந்த கலங்களை நீக்க முடியும். 5 நிமிடங்களின் பின்னர் முகத்தினை நீரினால் கழுவினால் சருமம் பளபளக்கும்.
 
இறுதியில் பேஸ் மாஸ்க் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தை ஈரப்பதமாக பேணுவதுடன் சிறந்த தோற்றத்தை பெற முடியும்.
 
கிரீன் டீ தேன் பேஸ் மாஸ்க்: ஒரு பாத்திரத்தில் 2-3 மேசைக்கரண்டி கிரீன் டீயுடன் 1 மேசைக்கரண்டி தேனைச் சேர்த்துக் கொள்ளவும்.  இதனை முகத்தில் தடவி வட்டவடிவில் மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்கள் அதனை உலரவிட்டு நீரினால் கழுவவும். தேனைப்  பயன்படுத்துவதனால் சருமம் ஈரப்பதமாக இருப்பதுடன் பளபளப்பையும் பெற முடியும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சுவையான புதினா புலாவ் செய்வது எப்படி...?