புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பிரகாசமான முகத்தை பெற அற்புதமான அழகு குறிப்புகள்...!!

தோலில் ஏற்படும் சுருக்கங்கள் மறைய கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து உடம்பில் பூசி ஒருமணி நேரம் வைத்து பிறகு குளித்தால் தோலில் உள்ள சுருக்கம் மறையும்.
* பப்பாளி பழச்சாற்றை முகம் மற்றும் கழுத்தில் தடவி சில நிமிடம் சென்றபின் நீரால் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
 
நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவினால் பருக்கள் மறையும்.
 
அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர் மற்றும் பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தில் வெயிலால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.
 
முகத்தில் உள்ள துவாரங்களை போக்க ஒரு குச்சியில் பஞ்சை சுற்றி அதை எலுமிச்சை சாறில் நனைத்து துவாரங்கள் இருக்கும் இடத்தில் தடவினால் துவாரங்கள் அடைபட்டு விடும்.
 
காலில் உள்ள நகங்களை உப்பு கலந்த நீரில் 10 நிமிடம் ஊறவைத்து பிறகு பழைய பிரஷ்ஷினால் தேய்த்தால் நகங்கள் சுத்தமாகும். மேலும்  கிருமிகள் அழிந்து விடும்.
 
உடலில் வெயில் படும் இடங்களில் உள்ள கருமை நிறத்தை போக்க எலுமிச்சைச் சாறு மற்றும் பால் ஆகியவற்றை கலந்து தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் உடலில் உள்ள கருமை நிறம் மாறும்.