செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும் பப்பாளி !!

பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக சரிசெய்யும்.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் பப்பாளி நல்லது. சருமத்தில் சுருக்கம் விழாமல்  பாதுகாக்கும்.
 
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
 
முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி,  பொலிவைக் கூட்டும்.
 
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக்  கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் பப்பாளி அருமருந்தாகும்.
 
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி சிறந்த மருந்து. அடிவயிற்றுப் பிரச்சினைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.