சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற அற்புத இயற்கை மருத்துவம்...!!
சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற அழகு நிலையம் சென்று வேக்ஸிங் செய்து கொள்வதை பல பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அவ்வாறு சென்று பணத்தை வீணடிக்காமல் சில இயற்கை முறையில் சருமத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் வராமல் இதனை போக்க முடியும்.
வெதுவெதுப்பான எலுமிச்சை சாற்றில் தேன் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, தேவையற்ற இடத்தில் வளரும் முடியின் மீது தடவி பின் ஸ்கரப் செய்து எடுக்க வேண்டும். இதன் மூலம் மென்மையான மற்றும் பட்டுப் போன்ற சருமத்தைப் பெறலாம்.
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.
மஞ்சளை பப்பாளி அல்லது கடலை மாவுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் 15 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனைக் காணலாம்.
கடலை மாவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.
வாரத்திற்கு இரண்டு முறை சர்க்கரையை தேனில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், முடியின் வளர்ச்சி தடைபடும்.