செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

சருமத்தை பளபளப்பாக்க உதவும் சாக்லேட் மாஸ்க்...!!

சாக்லேட்டில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் விட்டமின்களை அதிகமாக கொடுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் சாக்லேட் மாஸ்க் செய்தால் முகம் பளபளப்பாக மாறும். மேலும், மாசு அதிகமாக இருக்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை சாக்லேட் மாஸ்கினை செய்தால் தொற்று நோய் ஏற்படாமல் பார்த்து கொள்ள முடியும்.
 
சாக்லேட் மாஸ்க் எப்படி செய்வது...?
 
டார்க் சாக்லேட்டை வாங்கி, அதனை சூடாக்கி மெல்ட் செய்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் மெல்டட் சாக்லேட், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்களில்  கழுவி விடலாம்.
சாக்லேட் சிரப்: கோக்கோ பவுடரை சூடாக்குங்கள். சிறிதளவு கல் உப்பையும் சேர்த்து நன்றாக கிளறுங்கள். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் உப்பு,  நம் சருமங்களில் உள்ள இறந்த செல்களை நீக்கிடும். இத்துடன் இரண்டு ஸ்பூன் பாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
சாக்லேட் பெடிக்கியூர்: ஆரோக்கியமான சருமம் வேண்டுபவர்கள் தாராளமாக சாக்லேட் பயன்படுத்தலாம். வறண்டு பித்த வெடிப்புகளுடன் இருக்கும் கால்களுக்கு பெடிக்கியூர் செய்யும் போது சாக்லேட் பயன்படுத்தினால் சாஃப்ட்டாக மாறும்.
சாக்லேட் லிப் பால்ம்: உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவிடும். வறண்டு தோல் உரிவது இதனால் தவிர்க்கப்படும்.  சாக்லேட் சிரப்பை ஒரு நாளில் இரண்டு முறை உதடுகளில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள்.