வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலை !!

கொய்யா இலை பல்வேறு முடி பிரச்சனைகளான முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றிற்கு உடனடி தீர்வளிக்கும். இதற்கு காரணம் கொய்யா இலையில் உள்ள கசப்புத்தன்மை எனலாம்.

முடி அதிகம் கொட்டினால், கொய்யா இலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அவற்றைக் கொண்டு தலையை அலசுங்கள். இதனால் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், மயிர்க்கால்கள் வலிமையுடன் இருக்கும்.
 
பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுபவர்கள், கொய்யா இலையை அரைத்து பொடி செய்து, நீரில் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15 நிமிடம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், அதில் உள்ள கசப்புத்தன்மையினால் பொடுகை உண்டாக்கும்  பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 
முடியின் முனைகளில் வெடிப்புக்கள் அதிகம் இருந்தால், முடியின் வளர்ச்சி தடைப்படும். எனவே முடி வெடிப்புக்களைத் தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து  பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
 
கொய்யா இலையின் சாறு பேன்களை அழித்து வெளியேற்றிவிடும். அதற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊறவைத்து  அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 
தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு காரணம் பேன் அல்லது வறட்சியான ஸ்கால்ப் கூட இருக்கலாம். இப்படி ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
 
உங்கள் தலையில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால், கொய்யா இலை அதற்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு கொய்யா இலையை சுடுநீரில் 20 நிமிடம் ஊறவைத்து, பின் அந்த நீரைக் கொண்டு தலை முடியை அலச வேண்டும்.