தொடர்ந்து பழங்களை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!
வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.
தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சில் வைட்டமின்-ஏ அதிகமாகவும், வைட்டமின்-சி-யும், -பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
திராட்சைப் பழம்: எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின்-ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும்.
பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
மாதுளம் பழம்: மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல் நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.