வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By

பூசணிக்காயில் ஃபேஸ் பேக் செய்யலாம் தெரியுமா...?

பூசணிக்காயில் நிறைய நீர்ச்சத்துக்கல் உள்ளது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. வறண்ட சருமம், எண்ணெய் சருமம் அல்லது சென்ஸிடிவ் சருமமாக இருந்தாலும், இந்த ஃபேஸியல் பேக் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.
தேவையா பொருட்கள்: பூசணிக்காயின் சதைப்பகுதி அரைக் கப், தேன்  அரை ஸ்பூன், பால் கால் டீஸ்பூன், பட்டைப் பொடி சிறிதளவு.  பூசணியின் சதைப்பகுதியை மசித்து, அதனுடம் தேன், பால் சேர்த்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் பளபளப்பாக  இருக்கும். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இதனை செய்து வருவதால் நல்ல பலனை பெறலாம்.
 
பூசணிக்காயை பயன்படுத்தி முகப்பருக்களை விரட்ட, பூசணி சதைப்பகுதியுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, கலக்கவும். இவற்றை முகத்தில் போட்டு காய்ந்தவுடன் கழுவுங்கள். வாரம் 3 முறை செய்தால், முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
பூசணியின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் சர்க்கரை, கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவிவிடவும். இது சருமத்தில் ஈரப்பதம் அளித்து, மென்மையாக வைக்க உதவும்.
 
பூசணியின் சதைப்பகுதியுடன், சிறிது எலுமிச்சை சாறு, ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, முகத்தில் தேய்கவும். இவை சருமத்தில் அமில காரத் தன்மையை சமன் செய்யும் தனை கொண்டது.