செர்ரிப் பழத்தில் என்னென்ன வைட்டமின்கள் உள்ளது தெரியுமா...?

செர்ரிப் பழம் பார்ப்பதற்கு அழகாகவும், உண்பதற்கு இனிப்பு மற்றும் புளிப்பு சுவையினை உடையதாக இருசுவைகளில் காணப்படுகிறது. செர்ரி பழங்கள் சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.
இப்பழத்தில் காணப்படும் ஃபிளவனாய்டுகள் செரிமானத்தை தூண்டுகின்றன. இப்பழத்தில் காணப்படும் விட்டமின்கள் உடலானது ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதை ஊக்குவிக்கிறன. 
 
காலை மற்றும் மதிய வேளைகளில் செர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலின் வேளைகளில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
 
பார்வைக்குறைபாடு, வயதுமுதிர்வினால் ஏற்படும் கண்கள் வறட்சி, தசை அழற்சி நோய், கண்களின் வீக்கம், கண் தொற்று நோய்கள்  போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கண்ணின் விழித்திரையில் அழுத்தத்தை சீராக வைக்கிறது.
 
செர்ரி இரத்தத்தில் கொழுப்பினைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை செம்மையாக செயல்பட செய்கின்றன. இதனால் மாரடைப்பு இதய நோய்கள் ஆகியவை வராமல் இப்பழம் பாதுகாக்கிறது.
 
இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதோடு மூளையின் நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றன.
மூளைச் செயல்பாடு, ஞாபக மறதி போன்றவற்றிற்கு இப்பழத்தினை தொடர்ந்து உண்ணும்போது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு ஞாபகசக்தியும் மேம்பாடு அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
நரம்பு மண்டல குறைபாடுகளால் ஏற்படும் நோய்களான அல்சைமர், பார்க்கின்சன் நோய் போன்றவற்றிற்கு இப்பழம் வரப்பிரசாதமாகும். நாள்பட்ட மனஅழுத்தம், பதட்டம், மிதமிஞ்சிய கவலை, ஏமாற்றம் போன்றவற்றிற்கும் இப்பழம் நிவாரணியாகும்.
 
இப்பழத்தில் காணப்படும் நார்சத்து நம்மை மலச்சிக்கலிருந்து பாதுகாக்கிறது. இப்பழத்தில் உள்ள அமிலங்கள் செரிமானம் நன்கு நடைபெற  உதவுகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :