புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

சிறியவர் முதல் பெரியவர் வரை நலம் தரும் கேழ்வரகு!

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. நம் முன்னோர்கள் வலுவுடனும், வளமுடனும் நலமுடனும் வாழ்ந்ததற்கு கேழ்வரகு உணவு மிக முதன்மையான காரணம். கால்சியம், இரும்பு சத்துகள் இதில் அதிகம். மேலும் உடல் குளிர்ச்சியடைய  உதவும்.
உடலுக்கு சிறந்த போஷாக்கும் அளிக்க கூடியது “சிறுதானியங்கள்” ஆகும். இந்த சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”.
 
கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்ண கொடுப்பதால் அவர்களின்  உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
 
மோருடன் கேழ்வரகுக் கூழ் வெங்காயம் பச்சை மிளகாய் கலந்து சாப்பிடுவது நல்லது. இரத்த சோகை வராமல் தடுக்க, வந்தால் போக்க இது  பெரிதும் பயன்படும்.
கேழ்வரகை முளைகட்டி உலர்த்தி அதைப் பொடியாக்கி சலித்தால் கிடைப்பது “ராகிமால்ட்”. இது பல மடங்கு சக்தியுடையது. 
 
கேழ்வரகு மாவுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.
 
கேழ்வரகு மாவு ஒரு ஸ்பூன் எடுத்து 5 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைத்து கஞ்சியாக்கி குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். 2 வயதுக்குப் பின்  பெரியவர்கள் உண்பதுபோல குழந்தைக்குக் கொடுக்க வேண்டும்.
 
கேழ்வரகு மாவுடன் வெல்லம் சேர்த்தும் அடை செய்து சாப்பிடலாம். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கேழ்வரகு கூழ் மட்டுமே சாப்பிட  வேண்டும்.
 
பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.  தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
 
இது கெட்டக் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால், இதயநோய் வராமல் காக்கும். பெண்களுக்கு கேழ்வரகு மிகவும் நலம் தரும். பெண்களின் பால்சுரப்பு குறைபாட்டை நீக்கும்.