1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Updated : சனி, 19 பிப்ரவரி 2022 (18:07 IST)

கூந்தலை மென்மையாக்க உதவும் அழகு குறிப்புகள் !!

இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து நன்கு கிளறவும்.


சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது.

வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.

அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும்.

ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.