செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (18:28 IST)

சருமத்தை இயற்கையான முறையில் ப்ளீச்சிங் செய்வது எப்படி...?

இயற்கையான முறையில் சருமத்தை ப்ளீச்சிங் செய்வதால், கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை முற்றிலும் வெளிவந்து, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.


பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் பிளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம்.

1 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

1 சிட்டிகை மஞ்சள் தூளில், சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.

2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கலந்து, முகத்தில் தடவி காயவைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் பளிச்சென்ற முகத்தைப் பெறலாம்.