1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified: புதன், 4 மே 2022 (13:09 IST)

முக வறட்சியை போக்கி புது பொலிவை பெற உதவும் அழகு குறிப்புகள் !!

விளக்கெண்ணெய்யில் ஆல்கலாய்டுகள், கிசைரைடுகள் மற்றும் புரதம் உள்ளது. இது ஏராளமான மருத்துவ பயனுடையது.


இளம் வயதிலே சரும சுருக்கம் உள்ளவர்கள் முகத்தில் விளக்கெண்ணெய்யை தடவி மசாஜ் செய்து வந்தால் சுருக்கள் நீங்கி புது பொலிவை பெறலாம்.

வெயிலின் தாக்கத்தால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு விளக்கெண்ணெய்யை முகத்தில் சற்று அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.

முகப்பருவை போக்க இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யில் காட்டன் துணியில் நனைத்துகொண்டு முகத்தில் நன்றாக மசாஜ் செய்து காலையில் கழுவி வந்தால் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி சருமத்தை மென்மையாக்கும்.

முகத்தில் அதிக வறட்சி இருந்தால் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். விளக்கெண்ணெய்யை தூங்குவதற்கு முன் உதடுகளை தேய்த்து வர உங்கள் உதட்டை அழகாக மாற்றும்.

பிரசவத்தின் போது ஏற்படும் தழும்புகளை போக்க விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்புகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

நீளமான கண் இமையை பெற இரவில் படுக்கும் முன் கண் இமைகளில் தடவி வந்தால் கண் இமைகள் நீளமாக வளரும். விளக்கெண்ணெய், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து சிகைக்காய் போட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.