1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

சரும வறட்சியை போக்கி எப்போதும் ஈரப்பதமாக இருக்க உதவும் விளக்கெண்ணெய் !!

சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். இல்லையெனில் வறட்சியாகி வெடிப்பை உண்டாக்கும். சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம். அதனோடு பராமரிப்பும் தேவை. 

முகப்பருக்கள் பெரும்பாலும் எண்ணெய்பசை சருமத்தால் வருகின்றன என்றாலும் பராமரிப்பு சரியில்லாத நிலையிலும் இவை வரலாம். முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்தால் முகப்பருவை தடுக்கலாம்.
 
விளக்கெண்ணெய் தயாரிக்க பயன்படுத்தும் முத்துகொட்டை விதைகள் புரோட்டின் சாற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
 
முகத்தில் சிவப்பு தடிப்பு, அரிப்பு போன்றவை சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும். அது தீவிரமாகாமல் ஆரம்பகட்டத்தி சிகிச்சை மேற்கொள்ளலாம். பூஞ்சை தொற்று விளக்கெண்ணெய் சரிசெய்யகூடும். கேண்டிடா வளர்ச்சியை விளக்கெண்ணெய் தடுக்க கூடும். இந்த பூஞ்சை வாய் வழி தொற்று, ஆணி பூஞ்சை. கால், டயபர் சொறி போன்றவற்றை உண்டாக்கும். முகத்தில் உண்டாகும் சிவப்பு தடிப்பையும் சரி செய்யகூடும்.
 
விளக்கெண்ணெய் அடர்த்தியானது என்பதால் இதை அப்படியே நேரடியாக பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கலாம். ஆனால் விளக்கெண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து அதில் சுத்தமான பருத்தி உருண்டையை நனைத்து ஊறவைத்து சருமத்தில் முகம், கழுத்து பகுதியில் நேரடியாக துடைத்து விடவும்.