1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (10:52 IST)

சருமத்தை வறட்சியின்றி வைக்க உதவும் ஆமணக்கு எண்ணெய் !!

உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இப்படி பட்ட நபர்கள் தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணையின் சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்கும்.


பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிவதால், கண்களின் மீது அதிகம் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்பார்வைத் திறனையும் பாதிக்கிறது. தினமும் இரவில் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சியடையும்.

நடுத்தர வயது முதல் முதியோர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக மூட்டு வலி பிரச்சனை இருக்கிறது. தினமும் சில துளிகள் விளக்கெண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும்.

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்து ஹேர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதை விட, விளக்கெண்ணெய்யை தலைக்கு குளிக்கும் முன் 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, நல்ல கண்டிஷனர் போட்டது போல் இருக்கும்.

விளக்கெண்ணெய் கொண்டும் சருமத்திற்கு கிளின்சிங் செய்யலாம். அதிலும் ,இதனை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்தின்றி காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும்.

தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் அனைத்து நீங்கிவிடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெய்யை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.