பல் கூச்சம் ஏற்பட என்ன காரணம்?
சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை உட்கொள்ளும் போது வலி ஏற்படும் இவைதான் பல் கூச்சம் எனப்படுகிறது. சில சமயம் நீர் அருந்தினால் கூட இந்த வலி உண்டாகும்.
இதற்கான முக்கிய காரணம், பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைந்து, உள்ளே இருக்கும் மென்மையான பகுதி வெளிப்படுவதுதான்.
இந்த மென்மையான பகுதி பற்களின் உணர் நரம்புகளை கொண்டது. இந்த பகுதி வெளிப்படும் போது உணர்ச்சிகள் பல மடங்காக பெருகுவதே வலி ஏற்படுவதற்கான காரணம்.
அதிக அளவு இனிப்பு, சாக்லேட், ஐஸ்கிரீம், அமில உள்ளடக்கம் கொண்ட உணவுகள், கோலா போன்ற பானங்கள் பற்களில் உள்ள எனாமலின் எண்ணிக்கையை குறைத்து பல் கூச்சத்திற்கு வழிவகுக்கும்.
மௌத் வாஷில் உள்ள அமில உள்ளடக்கங்கள் பற்களில் உள்ள எனாமலை பலவீனமடைய செய்யும். முறையற்ற பல் துலக்குதல் வயது மேம்பாடு மூலமும் ஏற்படலாம். வெண்மையான பற்களை பெற செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இதற்கு வழிவகுக்கும்.