முகத்தில் மஞ்சள் பூசினால் பருக்கள் வருமா?
முகத்தில் மஞ்சள் பூசுவது என்பது ஆரோக்கியமானது என்றும் அழகாக இருக்க வேண்டுமென்றால் மஞ்சள் பூச வேண்டும் என்றும் பழங்காலத்தில் கூறுவது உண்டு
ஆனால் தற்கால பெண்கள் மஞ்சள் பூசுவதை மறந்து விட்டன.ர் ஆனால் அதே நேரத்தில் ஒருசிலர் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் பூசுவதால் முகத்தில் பருக்கள் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன
எனவே மஞ்சள் பூச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் செடிகளில் விளைந்த மஞ்சள் கிழங்கை தான் பூச வேண்டும் என்றும் கெமிக்கல் நிறைந்த மஞ்சள் பூசினால் பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இதனிடையில் முகப்பரு வந்துவிட்டால் பருக்களைக் கிள்ளவோ அழுத்தக் கூடாது என்றும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் எந்த வித வாசனை சோப்புகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும் நெய் வெண்ணெய் கேக் சாக்லேட் போன்றவைகளையும் சாப்பிட்டால் முகப்பரு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்றும் கீரைகள் பச்சை காய்கறிகள் சாப்பிட்டால் பருக்கள் வராது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்
Edited by Mahendran