1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (19:48 IST)

முகம் கருத்துவிட்டதா? இதோ ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முறை!

bleeching
முகம் கருத்துவிட்டதா? இதோ ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முறை!
முகம் கருத்துவிட்டால் அதை சரி செய்வதற்கு ஏராளமான ப்ளீச்சிங் முறைகள் உள்ளன என்பதும் ஆனால் ரசாயன முறைகள் என்பதால் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்
 
இந்த நிலையில் முகம் கருத்துவிட்டால் எளிமையான முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் பிளீச்சிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
 
முதலில் புளியை வெந்நீரில் ஊறவைத்து நன்றாக சாறு பிழிந்து கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள் தூள், அரிசி மாவு மற்றும் தேன் கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்
 
அதன் பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட்டு புளி கலந்த கலவையை எடுத்து முகம் முழுவதும் தடவி வேண்டும். ஒரு சில நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவி டவல் எடுத்து துடைத்துக் கொள்ளவேண்டும்.  இதே போன்று ஒரு சில வாரங்கள் செய்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி ஒரிஜினலான நிறத்தை பெறலாம். 
 
 
Edited by Mahendran