1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (19:59 IST)

சர்க்கரை நோயால் பல் பாதிப்பு ஏற்படுமா?

Teeth
பல் பாதிப்பு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் அதன் காரணமாக பல் நோய் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்தாலும் கூடினாலும் பிரச்சனை தான் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்துக்கொண்டால் பல் நோய் உட்பட எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த தவறினால் பல்லில் உள்ள கிருமிகள் காரணமாக பல்நோய் வரும் என்பதும் எனவே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள சர்க்கரை நோயாளிகள் தகுந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Siva