திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:52 IST)

சிறுமிகள் ஆபாச படம் பார்க்கும் கும்பல்; காட்டிக் கொடுத்த நிறுவனம்! – டெல்லியில் அதிரடி!

டெல்லியில் சிறுமிகள் ஆபாச படங்களை பார்க்கும் கும்பலை அமெரிக்க நிறுவனத்தின் உதவியுடன் அதிரடி கைது செய்துள்ளனர் டெல்லி போலீஸார்.

அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ள நிலையில், அதில் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகமான ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறப்படும் நிலையில் பல ஆபாச இணையதளங்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆபாச படங்களில் முக்கியமாக 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமிகளின் படங்களை பார்ப்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அவ்வாறான படங்கள் பார்ப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் சட்டம் அனுமதிக்கிறது. ஆபாச படங்கள் அதிகம் பார்ப்பவர்கள் குறித்த தகவல்களை அமெரிக்க தகவல் தொழில்நுட்ப தொண்டு நிறுவனம் ஒன்று தேசிய குற்ற ஆவண காப்பகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்நிறுவனம் வழங்கி வருகிறது.

அவ்வாறாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் டெல்லி போலீஸ் நடத்திய ‘மசூம்’ என்ற நடவடிக்கையில் சிறுமிகள் ஆபாசப்படம் பார்த்த 36 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K