வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 ஜனவரி 2019 (17:32 IST)

குளிர்காலத்தினால் சளி தொல்லையா? எளிதான தீர்வு இதோ...

குளிர்காலம் துவங்கிவிட்டது, பனிபொழிவும் அதிகமாக காணப்படுகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சளி தொல்லைக்கும் மற்ற உடல்நல உபாதைக்கும் தீர்வை தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
1. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். எனவே குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். 
2. குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு உதவுகிறது. 
3. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனென்றால் ஆரஹ்ன்சு பழத்தில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். 
4. ஆரஞ்சை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க பருக வேண்டும். 
5. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள உதவும். அதாவது, ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும்.