வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம்...!
ஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும். ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் உங்கள் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்களுக்கு முடி கொட்டுதலை தடுத்து முடி வளர வழி வகுக்கும்.
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்.
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உள்ளது. இது உங்களுக்கு புற்று நோய் ஏற்படாமல் காக்க உதவுகின்றது. தினமும் ஆரஞ்சு பழம் உண்டு வரும் பெண்களுக்கு 50 சதவீதம் புற்று நோய் வருவது குறைவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக அளவு நார்சத்து உங்கள் இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையினை குறைக்க உதவுகின்றது.எனவே இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு பழத்தினை உண்டு வாருங்கள்.
உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகள் பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தும். முக்கியமாக இருதய கோளாறு, இரத்த கொதிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகின்றது.
மலசிக்கல் என்பது அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று ஆகும். அதிலும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உங்களுக்கு மலசிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்.