வியாழன், 12 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (21:20 IST)

இரும்புச்சத்து குறைந்தால் என்ன பிரச்சனை உருவாகும்?

iron
இரும்புச்சத்து குறைந்தால் என்ன பிரச்சனை உருவாகும்?
ஒரு மனிதனுக்கு இரும்புச் சத்து என்பது மிகவும் அவசியம் என்றும் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
குறிப்பாக இரும்புச் சத்துக் குறைவு காரணமாக ரத்தசோகை நோய் ஏற்படும் ரத்தசோகை நோய் ஏற்படுவதற்கு இரும்புச்சத்து தான் பிரதான காரணம் என்றும் கூறப்படுகிறது
 
இரும்புச்சத்து குறைந்தால் ரத்த சிவப்பணுக்கள் உருவாகாது என்றும் அதனால் இரும்புச்சத்து குறைவதால் ரத்த சோகை என்னும் அனிமியா ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
ரத்தசோகை நோய் ஏற்பட்டால் வயிற்றில் குடல் புண் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும் என்றும் ஒரு சிலரின் உடலில் இரும்புச்சத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்காது என்றும் கூறப்படுகிறது 
 
ரத்தசோகை நோய்க்கு திராட்சை, ஆடாதொடை, சோற்று கற்றாழை ஆகியவைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பேரிச்சம்பழம் கீரைகள் முந்திரிப்பருப்பு பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் உள்ளது என்றும் கல்லீரல், முட்டை வெள்ளைக் கரு ஆகியவற்றை சாப்பிட்டால் ரத்த சோகை நோய் வராது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran