1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 7 டிசம்பர் 2024 (18:30 IST)

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு அமைதியான கொலையாளி என்று மருத்துவ உலகில் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த ரத்த அழுத்தத்தை தவிர்க்க 4 விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

முதலாவதாக, உணவு பழக்க வழக்கங்கள்: தவறான உணவு பழக்கவழக்கமே ரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவுகள் உள் உறுப்புகளை பாதிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே தினசரி உணவில் தானியங்கள் மற்றும் புரதங்கள் அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

இரண்டாவது, நடை பயிற்சி: தினமும் 30 நிமிடம் குறைந்தது நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதன் காரணமாக இதயத்தில் ரத்தத்தை சீராக பம்ப் செய்ய உதவுகிறது.

மூன்றாவது, உடல் எடையை பராமரிப்பது: உடல் எடை அதிகரிப்பு ரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்பதால், உடல் எடையை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

நான்காவது, மன அழுத்தம்: மன அழுத்தம் காரணமாகவே பலர் ரத்த அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். தேவையில்லாத சிந்தனைகள், அவசியம் இல்லாத கவலை ஆகியவற்றை கைவிட்டு, "என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்" என்று பார்வை வைத்துக் கொண்டால், ரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.



Edited by Mahendran