வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 நவம்பர் 2022 (17:17 IST)

சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?

pistha
சர்க்கரை நோயாளிகள் பிஸ்தா சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படுமா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டால் பிரச்சினை வரும் என்று வதந்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் உண்மை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
கொழுப்பு சத்து புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பாதாம், பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்றும் குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
பிஸ்தாவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால் பசி உணர்வைக் கட்டுபடுத்தி நீண்ட நேரம் சோர்வின்றி உணர வைக்கும் தன்மை அதற்கு உள்ளது என்றும் அதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தா சாப்பிடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
ஆனால் அதே நேரத்தில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் பிஸ்தாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 கிராம் வரை தினமும் பிஸ்தாவை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பிஸ்தாவை எடுத்துக்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva