1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (19:22 IST)

சர்க்கரை நோய் மாதிரி மாரடைப்பு பரம்பரை வியாதியா?

heart attack
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால் அவரது வாரிசுகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மாரடைப்பு அதே போல் வாரிசுகளுக்கு 30% வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
குடும்பத்தில் உள்ள பெற்றோருக்கு மாரடைப்பு வந்தால் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதம் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் வாழ்க்கை முறையை சரியாக கட்டமைத்துக் கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆரோக்கியமான உணவுகள், சரியான உடற்பயிற்சி ஆகியவை எடுத்துக்கொண்டு மது புகை ஆகியவற்றை தவிர்த்து வந்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
மேலும் அவ்வப்போது உடல் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை பயன்படுத்தி மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடித்து மகிழ்ச்சியாக இருந்தால் மாரடைப்பு நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுவதுண்டு
 
Edited by Mahendran