திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஜூன் 2023 (20:53 IST)

மூலிகை டீயில் சர்க்கரை சேர்க்கலாமா?

காபி, டீ ஆகியவற்றுக்கு மாற்றாக தற்போது மூலிகை டீ பலர் குடித்து வருவதை பார்த்து வருகிறோம். ஆனால் அதே நேரத்தில் சிலர் மூலிகை டீயில் சர்க்கரை சேர்த்து குடித்து வரும் நிலையில் அது சரியா என்பது குறித்து தற்போது பார்ப்போம். 
 
மூலிகை டீயில் சுவைக்காக சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சர்க்கரையை சேர்த்தால் மூலிகை டீயில் உள்ள பலன் கிடைக்காது என்று கூறப்படுகிறது. 
 
சர்க்கரைக்கு மாற்றாக தேன் சேர்த்து பருகலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மூலிகை டீ அதிகமாக சூடாக இருக்கும்போது தேன் கலக்கக் கூடாது என்றும் மிதமான சூட்டில் மட்டுமே கலக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
பொதுவாக மூலிகை டீயில் அதிக சூடாக அல்லது குளிர்ச்சியாக குடிக்கக்கூடாது என்றும் மிதமான சூட்டில் பருகுவது தான் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் மேலும் மூலிகை டீ மிஞ்சி விட்டால் சில மணி நேரம் கழித்து சூடு படுத்தி குடித்தால் அதில் உள்ள மூலிகை சத்துக்கள் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.  
 
Edited by Mahendran