மார்பகத்தை பெரிதாக்க ஹார்மோன் ஊசி போட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?
ஒரு சிலர் மார்பகத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹார்மோன் ஊசிகள் போட்டுக் கொள்வதாக கூறப்படும் நிலையில் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.
பொதுவாக உடல் உறுப்புகளை வளர்ச்சி அடைய செய்வதற்காக மருந்துகள் மற்றும் ஹார்மோன் ஊசிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதில்லை. ஏனெனில் அதில் சில நன்மைகள் இருந்தாலும் பக்க விளைவுகள் கண்டிப்பாக இருக்கும் என்பதால் தான்.
குறிப்பாக மார்பக வளர்ச்சிக்காக ஹார்மோன்கள் செலுத்தினால் மார்பகம் பெரிதாக வளரும் என்பது உண்மைதான். ஆனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.
குறிப்பாக புற்றுநோய் பக்கவாதம் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிருக்கே கூட ஆபத்தான நிலை ஏற்படலாம். எனவே எந்த ஒரு உறுப்பையும் வளர்ச்சி அடைய செய்வதற்காக ஹார்மோன்கள் பயன்படுத்துதல் மிகப்பெரிய ஆபத்து என்றும் அதை செய்ய கூடாது என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மார்பகங்களின் அளவை அதிகரிக்க தகுந்த ஆலோசனையுடன் சில உடற்பயிற்சிகள் செய்தால் போதும் என்றும் தினந்தோறும் மசாஜ் செய்து வந்தாலே மார்பகத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran