1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (19:46 IST)

ஒரு மனிதனுக்கு 4 மணி நேரம் தூக்கம் போதுமா? ஆய்வும் ஆச்சரிய உண்மை..!

ஒரு மனிதன் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் புதிதாக எடுக்கப்பட்ட ஆய்வில் ஒரு மனிதனுக்கு நான்கு மணி நேரம் தூக்கம் போதுமானது என்று கூறப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிகமான தூக்கம் அல்லது குறைவான தூக்கம் உடல் நோய்க்கான அறிகுறி என்று கூறப்படும் நிலையில் இரண்டும் இல்லாமல் நார்மல் ஆக 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்பதுதான் அனைவருக்கும் பொருந்தும் ஒரு விதியாக உள்ளது.
 
இந்த நிலையில் ஒரு நபருக்கு 4 மணி நேரம் தூக்கம் போதும் என சமீபத்தில் டாக்டர் ஒருவர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். தூக்கம் வருவதில்லை என்றும் இரவில் மிக குறைந்த நேரம் தூங்கும் பலருக்கு இந்த ஆய்வு முடிவு ஓரளவு நிம்மதியை கொடுத்துள்ளது  
 
ஆனால் அதே நேரத்தில் அவரவர் வயதுக்கு ஏற்ற வகையில் உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற அளவில் ஓய்வு அவசியம் என்றும் நீண்ட நாள் ஆரோக்கிய வாழ்விற்கு சரியான தூக்கம் அளவு என்பது இன்றியமையாதது என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran