1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (20:23 IST)

காது இரைச்சல் ஏற்படுவது ஏன்? என்ன செய்யக்கூடாது?

ears
காது இரைச்சல் என்பது ஒரு முக்கிய விஷயம் என்பதால் அதை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
காது இரைச்சல் என்பது ஒரு நோய் அல்ல என்றும் அது ஒரு உணர்வு என்றும் அது ஒரு நோயின் வெளிப்பாடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
காதில் இரைச்சல் அல்லது விசில் அடிப்பது போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காதில் சுரக்கின்ற மெழுகு கட்டியாக மாறுவதால் காதடைப்பு ஏற்படும் என்றும், அடிக்கடி சளி பிடித்தாலும் காதில் நீர் கோர்த்து கொண்டாலும் காதில் இரைச்சல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இயந்திரங்கள் மத்தியில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி காது இரைச்சல் பிரச்சனை வரும் என்றும் இயர்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கும் காது பாதிப்பு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
 எனவே காது இரைச்சல் நோய் வராமல் தடுப்பதற்கு அதிகமாக இயர்போனை பயன்படுத்தக்கூடாது என்றும் காதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் கைமருத்துவம் காதுக்கு பார்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
Edited by Siva