காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறதா? இதெல்லாம் தான் காரணம்!
எந்தவிதமான கடினமான வேலை செய்யாமலேயே திடீரென உடல் வலி ஒரு சிலருக்கு ஏற்படும். காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்று நினைப்பவர்களுக்கு உடல் வலி எதனால் ஏற்படுகிறது என்ற காரணத்தை குறித்து தற்போது பார்ப்போம்
பொதுவாக மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பம் குறைவாக இருக்கும். எனவே உடலில் உள்ள ரத்த ஓட்டம் குறைவதால் உடல் வலி ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது
எனவே குளிர் காலத்தில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும் வகையில் சின்னச் சின்ன உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உடல் வலியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்
மேலும் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை உட்கார்ந்து அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தாலும் ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு முறை ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் எழுந்து உடலுக்கு ஒரு அசைவு கொடுத்துவிட்டு அதன் பிறகு பணி செய்தால் உடல் வலி ஏற்படாது
மேலும் இடையிடையே போதுமான ஓய்வு எடுக்க வேண்டும் என்பதும் மூட்டுகள் மற்றும் தசைகளில் லேசாக அவ்வப்போது மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என்பதும் அப்போது தசைகளுக்கு சூடு கிடைப்பதோடு இரத்த ஓட்டத்தை படம் என்பதும் குறிப்பிடத்தக்கது
குளிர் மற்றும் மழை காலங்களில் இளம் சூடான நீரில் குளிப்பதும் உடல் வலியை போக்கும்
Edited by Siva