உடலில் அரிப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?
ஒரு சிலருக்கு உடலில் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்படும் என்பதும் அதனால் புண்கள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அரிப்பு ஏற்படும்போது நாம் செய்யக் கூடாத மிகவும் முக்கியமான ஒன்று சொரிதல். அரிப்பு ஏற்படும்போது சொரிந்தால் மேலும் மேலும் அரிப்பு ஏற்பட்டு சருமத்தில் பிரச்சினை உண்டாகும்.
எனவே அரிப்பு ஏற்படும்போது உடனடியாக விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் கலந்த எண்ணெயை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் இந்த எண்ணையை தடவி மசாஜ் செய்தால் அரிப்பு நின்றுவிடும்
ஆனால் அதற்கு மாறாக சொறிந்தால் அந்த பகுதியில் புண் போல ஆகிவிடும் மேலும் அரிப்பு ஏற்படும் பகுதிகள் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்
Edited by Mahendran