1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2022 (19:20 IST)

குளிர்காலத்தில் ஏற்படும் தொண்டை பிரச்சனையை சரி செய்வது எப்படி?

Throat Diseases
குளிர் காலத்தில் பலருக்கு தொண்டை கரகரப்பாக இருக்கும் நிலையில் அதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். 
 
குளிர்காலம் என்றாலே பலருக்கு தொண்டை புண்கள் ஏற்பட்டு சாப்பிட முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு வெந்நீரில்   உப்பு மஞ்சள் கலந்து அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை புண் ஆறும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் காலை மாலை வேளைகளில்  மிளகு மஞ்சள் பனங்கற்கண்டு கலந்த பால் குடிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது
 
மேலும் குளிர்காலத்தில் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முடிந்தவரை சூடாகவே உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva