1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:53 IST)

செரிமானத்திற்கு உதவும் சீரகம்....!!

தினமும் காலையில் சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பல நன்மைகளை பெறலாம். பல காலமாகவே நம்முடைய பாரம்பரிய மருந்துகளில் சீரகம்  பயன்படுத்தப்படுகிறது. 
 
சீரகத்தை தவறாமல் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஜீரகம் உங்கள் உடலில் உள்ள செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.
 
சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஒரு டீஸ்பூன் ஜீரகத்தில் சுமார் 1.4 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கும். ஜீரகம் நீரிழிவு நோயை கட்டுக்குள்  வைப்பதற்கும் உதவும்.
 
ஜீரகம் உடலிலிருந்து கெட்ட கொழுப்பை அகற்ற பயன்படுகிறது. சீரகத்தை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
 
ஜீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதற்கும், எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தை தாராளமாக  பயன்படுத்தலாம்.
 
சீரகத்தை அப்படியே சாப்பிடுவதன் மூலமோ, அல்லது சீரகத் தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமாகவோ உடலிலிருந்து கொழுப்பை குறைக்க முடியும்.