திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:27 IST)

சர்வதேச விருது பெற்ற தமிழக வனத்துறை அதிகாரி !

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றி வந்த வனத்துறை அதிகாரி இன்று சர்வதேச விருது பெற்றுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவில் வனச்சரக அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் சதீஸ். இங்கு அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.  இவர் அங்கு கடல் அடைகளை வேட்டையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து அழிந்துவரும் சித்தாமைகளை பாதுகாக்கும் பணிகள்சிறப்பாக செய்து வந்தார்.

இந்நிலையில் சதீஸின் சேவையைப் பாராட்டி இவருக்கு சுவிட்சர்லாந்தீல் இண்டர்நேசனல் ரேஞ்சர் விருது கிடைத்துள்ளது. மேலும் ரூ.7.25 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.