1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Updated: செவ்வாய், 21 மார்ச் 2023 (23:55 IST)

குழந்தைகளுக்கு கிட்டப்பார்வையா? இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்..!

Eyel
குழந்தைகளுக்கு கிட்ட பார்வை ஏற்படுவதை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டி அருகில் உட்கார்ந்து பார்ப்பதை தவிர்க்க செய்ய வேண்டும். பார்வை கோளாறு உள்ள குழந்தைகளுக்கு விழித்திரை பிரச்சனை இருக்கின்றதா என அவ்வப்போது கண் விழித்திரை பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். 
 
மேலும் குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவதை முழுவதுமாக தடுக்க முடியாது என்றாலும் அதிகமாக செல்போனை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். 
 
தொலைக்காட்சி பெட்டியை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சில முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்ட பார்வை குறைபாடு தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran