திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மார்ச் 2023 (12:02 IST)

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 நிரந்தர வைப்பு நிதி: புதுவை முதல்வர் ரங்கசாமி!

பெண் குழந்தை பிறந்தால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி வைக்கப்படும் என புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் சற்றுமுன் சட்டசபையில் தெரிவித்துள்ளார். 
 
புதுவை முதலமைச்சர் இன்று சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் என்பதும் அதில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூபாய் 300 மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 ஆண்டுகளுக்கு ரூபாய் 50000 நிரந்தர வைப்பு நிதி செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 
 
18 ஆண்டுகள் கழித்து அந்த பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு அந்த வைப்பு நிதி பயன்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுவை முதல்வர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு புதுவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
Edited by Siva