எலும்புகள் வலுவாக இருக்க இதையெல்லாம் செய்ய வேண்டும்..!
எலும்புகள் மற்றும் பற்கள் கால்சியத்தால் ஆனது என்பதால் கால்சியம் சத்துடைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும் என்று கூறப்படுகிறது.
எலும்புகள் 50% புரதத்தால் ஆனது என்பதால் புரத சத்து நிறைந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடலுக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் மில்லி கிராம் கால்சியம் தேவை என்பதால் அதற்கு தகுந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக தயிர் பால் பொருட்களான பன்னீர், பச்சை இலை காய்கறிகள் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் எலும்பு உறுதி அடையவும் மூட்டு வலியை தடுக்கவும் சில ஆசனங்களை தகுந்த பயிற்சியாளர்கள் மூலம் செய்து கொள்ள வேண்டும்..
மேலும் ஸ்கிப்பிங் ஜாக்கிங் வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சியையும் யோகாசனமும் செய்யலாம்
Edited by Mahendran