1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (19:11 IST)

உணவில் மிளகு சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

Tail Pepper
10 மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிற்கு கூட சாப்பிட போகலாம் என்று பழமொழி கூறுவது உண்டு. அந்த வகையில் எந்த உணவு சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்வதற்கு மிளகு உதவி செய்கிறது. 
 
சளித்தொல்லை இருந்தால் மிளகு அதை உடனே தீர்க்கும் என்பதும் மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி உடனே தீரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி குணமாகும் என்றும் ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் துளசியை சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து சாப்பிட்டால் பசியின்மை நோய் குணமாகும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் வாய்வு பிரச்சனையை மிளகு அகற்றும் என்றும்  செரிமானத்தை எளிதாகும் என்றும் கூறப்படுகிறது. நஞ்சை முறிக்கும் தன்மையுடையது மிளகு என்பதால் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழியாகவும் உள்ளது.
 
Edited by Mahendran